1 யோவா 2:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அன்பானவர்களே, நான் உங்களுக்கு புதிய கட்டளையை அன்றி உங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன். நீங்கள் ஏற்கெனவே கேட்ட உண்மை வார்த்தையே அந்தக் கட்டளை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை. See the chapterபரிசுத்த பைபிள்7 எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. See the chapter |