1 கொரி 9:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 எனக்கு சுதந்திரம் உண்டல்லவா? நானும் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? ஆண்டவருக்காக நான் செய்த ஊழியத்தின் பலாபலனாக இருப்பவர்கள் நீங்கள்தானே? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ? See the chapterபரிசுத்த பைபிள்1 நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா? See the chapter |