Online Bible

- Advertisements -




தீத்து 3:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 ஆனால் மூடத்தனமான கருத்து முரண்பாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், நீதிச்சட்டத்தைப் பற்றிய தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் அவை பயனற்றவை, வீணானவை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.

See the chapter Copy




தீத்து 3:9

Follow us:

Advertisements


Advertisements