ரோமர் 9:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவர்கள்தான் இஸ்ரயேல் மக்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் என்ற உரிமை அவர்களுடையதே; இறைவனுடைய மகிமை, உடன்படிக்கைகள், மோசேயின் சட்டத்தைப் பெற்றுக்கொள்ளுதல், ஆலய வழிபாடுகள், வாக்குத்தத்தங்கள் யாவும் அவர்களுடையதே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; See the chapterபரிசுத்த பைபிள்4 அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இஸ்ரயேலர் எனப்பட்ட இவர்களே, இறைவனின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்ற உரிமை பெற்றவர்கள். இறைவனின் மகிமை பிரசன்னம், உடன்படிக்கைகள் என்பவை இவர்களுக்கே கிடைத்தன. மோசேயின் நீதிச்சட்டம், ஆலய வழிபாடுகள், இறைவாக்குறுதிகள் என்பவற்றையும் இவர்களே பெற்றார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; See the chapter |