எண்ணாகமம் 9:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அந்த மேகம் இரண்டு நாட்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகத் தங்கியிருந்தால், இஸ்ரயேலரும் முகாமில் தங்கியிருப்பார்கள்; புறப்படாதிருப்பார்கள். ஆனால் அது மேலே எழும்பும்போதோ அவர்கள் புறப்படுவார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருடமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யாமல் முகாமிட்டிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ புறப்படுவார்கள். See the chapterபரிசுத்த பைபிள்22 அந்த மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ இருந்தால் அவர்களும் அங்கே தங்கியிருப்பார்கள். கர்த்தரின் ஆணைப்படி மேகம் நகரும்வரை அவர்களும் நகரமாட்டார்கள். எப்போது மேகம் எழும்பி நகருகிறதோ அப்போது அவர்களும் நகருவார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள். See the chapter |