மல்கியா 1:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 “நாங்கள் நொறுக்கப்பட்டோம், ஆயினும் திரும்பிவந்து பாழடைந்தவற்றைக் கட்டியெழுப்புவோம்” என ஏதோமியர் சொல்லலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்கள் கட்டியெழுப்பலாம், ஆனால் நான் அதை இடித்து அழிப்பேன். அவர்கள் கொடுமையின் நாடு என்றும், எப்பொழுதும் யெகோவாவின் கோபத்திற்கு உள்ளான மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 ஏதோமியர்கள்: நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். See the chapterபரிசுத்த பைபிள்4 ஏதோமின் ஜனங்கள், “நாங்கள் அழிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் திரும்பிப்போய் மீண்டும் எங்கள் நகரங்களைக் கட்டுவோம்” என்று சொல்லலாம். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அவர்கள் மீண்டும் அந்நகரங்களைக் கட்டினால் பிறகு நான் மீண்டும் அவைகளை அழிப்பேன்!” எனவே ஜனங்கள் ஏதோமை ஒரு கேட்டின் நாடு என்கின்றனர். கர்த்தர் என்றென்றும் வெறுக்கும் ஒரு தேசம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். See the chapter |