புலம்பல் 2:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; யூதா மகளின் கோட்டைகளை தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். அரசுகளையும், அதன் இளவரசர்களையும் அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். See the chapterபரிசுத்த பைபிள்2 கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். அவர் அவரது கோபத்தில் யூதா குமாரத்தியின் கோட்டைகளை அழித்தார். கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் அதன் ராஜாக்களையும் தரையில் தூக்கி எறிந்தார். அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். See the chapter |