எரேமியா 8:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 பகைவரின் குதிரைகளின் சீற்றம், தாணிலிருந்து கேட்கப்படுகிறது. அவர்களின் ஆண் குதிரைகளின் கனைக்கிற சத்தத்தால் நாடு முழுவதும் நடுங்குகிறது. நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும், பட்டணத்தையும், அதிலுள்ள குடிகள் யாவரையும் விழுங்குவதற்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள். See the chapterபரிசுத்த பைபிள்16 தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது. அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது. அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும் அழிக்க வந்துள்ளனர். அவர்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள். See the chapter |