எரேமியா 3:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 வறண்ட மேடுகளில் அழுகை கேட்கிறது; இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டுதலுமே அது. ஏனெனில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்கேடாக்கி தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இஸ்ரவேல் மக்கள் தங்கள் வழியை மாற்றி, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்ததினால் அழுதுகொண்டு விண்ணப்பம் செய்யும் சத்தம் உயர்ந்த இடங்களில் கேட்கப்படும். See the chapterபரிசுத்த பைபிள்21 நீ மலைகளின் மேல் அழுகையைக் கேட்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் இரக்கத்திற்காக அழுதுகொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கெட்டவர்களானார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும். See the chapter |