எரேமியா 22:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: “நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும், லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும், நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும், குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 யூதா ராஜாவின் அரண்மனையைக் குறித்துக் யெகோவா: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்திரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். See the chapterபரிசுத்த பைபிள்6 யூதாவின் ராஜாக்கள் வாழ்கிற அரண்மனையைப்பற்றி கர்த்தர் இவற்றைத் தான் கூறுகிறார்: “அரண்மனை உயரமானது. கீலேயாத் காடுகளைப் போன்று உயரமானது. லீபனோனின் மலையைப்போன்று அரண்மனை உயரமானது. ஆனால் நான் அதனை வனாந்தரம் போன்று ஆக்குவேன். இந்த அரண்மனை ஆளில்லாத நகரத்தை போன்று காலியாகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். See the chapter |