1 தெச 2:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். See the chapterபரிசுத்த பைபிள்8 உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இவ்விதமாக, உங்களில் நாம் அதிக அன்பு கொண்டிருந்ததால், இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி கொண்டோம். ஏனெனில், நீங்கள் எங்களது அன்புக்குரியவர்களாக ஆகிவிட்டீர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். See the chapter |