பிலிப்பியர் 2:8 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 தோற்றத்தில் ஒரு மனிதனைப்போல் காணப்பட்டு, அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, சாகும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதாவது சிலுவையின்மேல் சாகுமளவுக்கு முற்றுமாகக் கீழ்ப்படிந்தார். See the chapterபரிசுத்த பைபிள்8 மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார். முடிவில் சிலுவையிலே இறந்தார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவர் மனித வடிவில் தோன்றி, உயிர் துறக்கும் அளவுக்கு, அதுவும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் அளவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரே தன்னைத் தாழ்த்தினார். See the chapter |