ரோமர் 9:23 - பரிசுத்த பைபிள்23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அத்துடன் இறைவன் முன்பே தன் மகிமைக்கென ஆயத்தம் செய்த மக்களுக்கு, அதாவது அவர் இரக்கம் செலுத்த விரும்புகின்ற மக்களுக்கு, தன் பெருநிறைவை வெளிப்படுத்தவும் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? See the chapter |