ரோமர் 7:4 - பரிசுத்த பைபிள்4 சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆகவே, பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கு மரித்தீர்கள். இப்பொழுது, நீங்கள் மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கே உரியவர்களானீர்கள் இதன்மூலம் நாம் இறைவனுக்குக் கனியை விளைவிக்கிறவர்களாய் இருக்கிறோம். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 எனக்குப் பிரியமானவர்களே, அவ்விதமாகவே நீங்கள் கிறிஸ்துவின் உடல் ரீதியான மரணத்தின் ஊடாக நீதிச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். நீங்கள் வேறொருவருக்குச் சொந்தமாகி, அதாவது மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கு சொந்தமாகி, அதனால் நாம் இறைவனுக்கு கனி கொடுப்பதற்காகவே இது நடந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். See the chapter |