ரோமர் 11:2 - பரிசுத்த பைபிள்2 இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து: See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 தாம் முன்னறிந்த தம்முடைய மக்களை இறைவன் புறக்கணிக்கவில்லை. எலியாவைப்பற்றி சொல்கின்ற இடத்திலே, வேதவசனம் என்ன சொல்கிறது என்றும், அவன் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் என்றும் அறியாதிருக்கிறீர்களா? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இறைவன் தாம் முன்பே அறிந்த தம்முடைய மக்களைக் கைவிடவில்லை. எலியாவைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது என்றும், அவர் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டார் என்றும் அறியாதிருக்கிறீர்களா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: See the chapter |