வெளிப்படுத்தல் 1:5 - பரிசுத்த பைபிள்5 இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார். பூமியில் உள்ள ராஜாக்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர். அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இறந்தவர்களிடையே முதற்பேறானவரும், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கின்றவரும், உண்மையான சாட்சியுமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி, See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. See the chapter |