Online Bible

- Advertisements -




மல்கியா 1:13 - பரிசுத்த பைபிள்

13 நீங்கள் அந்த மேசையில் உள்ள உணவை விரும்புவதில்லை. நீங்கள் அந்த உணவை நுகர்ந்து பார்த்து அதனை உண்ண மறுப்பீர்கள். அது கெட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பிறகு நீங்கள் நோயுள்ளதும், நொண்டியானதும், களவாடப்பட்டதுமான மிருகங்களை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எனக்கு நோயுற்ற விலங்குகளைப் பலியாகக் கொடுக்க முயல்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து அந்நோயுற்ற விலங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ‘இது எவ்வளவு தொல்லையாயிருக்கிறது!’ என்று காணிக்கை ஒப்புக்கொடுப்பதை இழிவாக பேசுகிறீர்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “காயப்பட்டதையும், ஊனமானதையும், நோயுற்றதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்தும்போது, அதை உங்கள் கைகளிலிருந்து நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ?” என யெகோவா கேட்கிறார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.

See the chapter Copy




மல்கியா 1:13

Follow us:

Advertisements


Advertisements