லூக்கா 8:3 - பரிசுத்த பைபிள்3 இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசா என்பவனின் மனைவி யோவன்னாளும், சூசன்னாளும் தங்களுடைய வருமானத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவளித்து உதவி செய்த வேறு பல பெண்களும் அவருடன் இருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். See the chapter |