லூக்கா 7:3 - பரிசுத்த பைபிள்3 அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நூற்றுக்குத் தளபதி இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். எனவே இயேசு வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரிடம் கேட்டுக்கொள்வதற்காக, யூதர்களின் சமூகத் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பினான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். See the chapter |