லூக்கா 6:7 - பரிசுத்த பைபிள்7 ஓய்வு நாளில் இயேசு அம்மனிதனைக் குணமாக்குவாரா என்பதைப் பார்ப்பதற்கு வேதபாரகர்களும், பரிசேயர்களும் காத்துக்கொண்டிருந்தனர். குற்றம் சுமத்தும்படியாக இயேசு ஏதேனும் தவறைச் செய்வாரா என அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும், இயேசு மீது குற்றம் சுமத்துவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எனவே அவர் ஓய்வுநாளில் அவனைக் குணமாக்குவாரோ என்று இயேசுவை குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். See the chapter |