லூக்கா 4:40 - பரிசுத்த பைபிள்40 கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 சூரியன் மறையும்போது மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதியுடையவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் தமது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 பொழுது சாயும் வேளையானபோது, மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களை இயேசுவினிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தமது கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். See the chapter |