லூக்கா 13:7 - பரிசுத்த பைபிள்7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எனவே அவன், அந்தத் திராட்சைத் தோட்டக்காரனிடம், ‘நான் இந்த அத்திமரத்தில் பழங்களைத் தேடி மூன்று வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பழம் எதையுமே நான் காணவில்லை. இந்த மரத்தை வெட்டிப்போடு. ஏன் இந்த மரம் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே அவன், அந்த திராட்சைத் தோட்டத்தின் பராமரிப்பாளனிடம், ‘நான் மூன்று வருடங்களாக இந்த அத்தி மரத்தில் பழங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். ஆயினும் இந்த மரத்தில் பழம் எதையுமே நான் காணவில்லை. இதை வெட்டிப் போடு. இது ஏன் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். See the chapter |