புலம்பல் 2:15 - பரிசுத்த பைபிள்15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள் உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள். அவர்கள் பிரமித்து எருசலேம் குமாரத்தியைப் பார்த்து தலையாட்டுகிறார்கள். அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’ ‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?” என்று கேட்கிறார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: “அழகின் நிறைவு என்றும், பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். See the chapter |