புலம்பல் 2:14 - பரிசுத்த பைபிள்14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள். ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின. அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை. அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை. அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர். ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 உனது இறைவாக்கு உரைப்போரின் தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே; உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி, அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை. அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும், வழிதவறச் செய்வதுமே. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள். See the chapter |