Online Bible

- Advertisements -




எரேமியா 4:29 - பரிசுத்த பைபிள்

29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும் வில் வீரர்களின் சத்தத்தையும் கேட்பார்கள். ஜனங்கள் ஓடிப்போவார்கள்! சில ஜனங்கள் குகைகளுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள். சில ஜனங்கள் புதர்களுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள். சில ஜனங்கள் பாறைகளுக்கு மேல் ஏறிக்கொள்வார்கள். யூதா நகரங்கள் எல்லாம் காலியாகிப் போகும். அவற்றில் எவரும் வாழமாட்டார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள். சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்; சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள். எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன; ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.

See the chapter Copy




எரேமியா 4:29

Follow us:

Advertisements


Advertisements