எபிரெயர் 2:14 - பரிசுத்த பைபிள்14 மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பிள்ளைகள் இரத்தமும் சரீரமும் உடையவர்களாய் இருக்கின்றபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்கு கொண்டார். அவருடைய மரணத்தினால் மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்த பிசாசை அழிப்பதற்கும், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், See the chapter |