ஆதியாகமம் 28:9 - பரிசுத்த பைபிள்9 அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் குமாரத்தியாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மயேலிடம் போய், அவன் மகள் மகலாத்தைத் திருமணம் செய்தான். நெபாயோத்தின் சகோதரியான அவளை ஏற்கெனவே தனக்கிருந்த மனைவிகளுடன் சேர்த்துக்கொண்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான். See the chapter |