எபேசியர் 6:13 - பரிசுத்த பைபிள்13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 எனவே, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். அப்போது, தீமையின் நாளில் எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிடவும், எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு உறுதியுடன் நிலைநிற்கவும் முடியும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். See the chapter |