எபேசியர் 2:2 - பரிசுத்த பைபிள்2 ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவற்றில் வாழ்ந்து வந்தீர்கள். இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு, ஆகாயத்து ஆட்சியாளனின் வழிகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அந்தத் தீய ஆவியானது இப்போது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். See the chapter |