கொலோசேயர் 3:15 - பரிசுத்த பைபிள்15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும். ஏனெனில் இந்தச் சமாதானத்துக்காகவே நீங்கள் ஒரே உடலின் அங்கங்களாய் இருக்க அழைக்கப்பட்டீர்கள். எனவே நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். See the chapter |