அப்போஸ்தலர் 22:4 - பரிசுத்த பைபிள்4 இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு துன்பப்படுத்தி இருக்கின்றேன். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். See the chapter |