அப்போஸ்தலர் 20:7 - பரிசுத்த பைபிள்7 கர்த்தரின் திருவிருந்தை உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பகிர்ந்துகொள்வதற்கு ஒன்றுகூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததனாலே, நள்ளிரவு வரை பேசிக் கொண்டேயிருந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். See the chapter |