அப்போஸ்தலர் 19:9 - பரிசுத்த பைபிள்9 ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி, விசுவாசிக்க மறுத்தார்கள்; அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் வழியைக் குறித்துத் தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப்போய், திறன்னு என்பவனின் கல்விக் கூடத்திலே, ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி விசுவாசிக்க மறுத்தார்கள். அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் மார்க்கத்தைக் குறித்து தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் போய் திறன்னு என்பவனின் கல்விக்கூடத்திலே ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அனுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான். See the chapter |