Online Bible

- Advertisements -




2 சாமு 14:32 - பரிசுத்த பைபிள்

32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை ராஜாவிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் ராஜாவைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கெசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 அதற்கு அப்சலோம் யோவாபிடம், “இதோ பார், ‘நான் ஏன் கேசூரிலிருந்து அழைத்துவரப்பட்டேன்? இன்னும் நான் அங்கே இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்’ என உன் மூலம் அரசனுக்குச் சொல்லியனுப்பும்படி உன்னை இங்கே வரும்படி ஆளனுப்பினேன். இப்பொழுது நான் அரசனின் முகத்தைப் பார்க்கவேண்டும். என்மேல் ஏதாவது குற்றமிருந்தால் அவர் என்னைக் கொலைசெய்யட்டும்” என்றான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

See the chapter Copy




2 சாமு 14:32

Follow us:

Advertisements


Advertisements