3 ஆகாசாளெ, பேறெ ஒந்து அடெயாளும் கண்டுத்து; அதனாளெ, கிச்சின ஹாற சொவந்ந நெற உள்ளா ஒந்து தொட்ட ராட்ச்சஸ ஹாவு கண்டுத்து; அதங்ங, ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் உட்டாயித்து; அதன தெலேமேலெ ஏளு கிரீடம் உட்டாயித்து.
அதுகளிஞட்டு, ஆகாசதாளெ தொட்ட ஒந்து அடெயாள கண்டுத்து; அது ஏன ஹளிங்ங, ஒந்து ஹெண்ணு சூரியன உடுப்பாயிற்றெ ஹைக்கித்தா; அவள காலா கீளேக நெலாவு உட்டாயித்து; அவள தெலேக ஹன்னெருடு நச்சத்தறத கிரீடமாயிற்றெ ஹைக்கித்தா.
ஆ ஹாவின பூமியாளெ தள்ளிகிடிகிதுகொண்டு, ஆ கெண்டுமைத்தித ஹெத்தா ஹெண்ணின உபத்தரகீவத்தெ பேக்காயி ஹோயிண்டித்து.
அதுகொண்டு, ஹாவு அரிசத்தோடெ, அவள மற்றுள்ளா மக்கள கொல்லத்தெபேக்காயி ஹோத்து; ஆக்க ஒக்க தெய்வத கல்பனெ அனிசரிசி நெடது, ஏசின சாட்ச்சியாயிற்றெ ஜீவிசிதாக்களாப்புது.
ஆ ஹாவு, ஆகாசாளெ இப்பா மூறனாளெ ஒந்து பாக நச்சத்தறத தன்ன பாலினாளெ, பூமியாளெ பலிச்சு கிடிகித்து; எந்தட்டு, பிரசவ வேதெனெயாளெ இப்பா ஹெண்ணின மைத்தித முணுங்ஙத்தெ பேக்காயி, அவள முந்தாக ஹோயி நிந்துத்து.
அதுகளிஞட்டு, ஆகாசாளெ மிகாவேலு ஹளா தூதனும், அவன தூதம்மாரும், ஹாவினகூடெ யுத்தகீதுரு; ராட்ச்சஸ ஹாவும், அதன தூதம்மாரும் ஈக்களகூடெ யுத்தகீதுரு.
அந்த்தெ பிசாசும், செயித்தானும் ஹளா ஹாவின கீளெ பூமியாளெ தள்ளிபுட்டுரு; அதனகூட்டதாளெ இப்பா அதன தூதம்மாரினும் தள்ளிபுட்டுரு; ஈ ஹாவு தென்னெயாப்புது ஆதிந்தே, லோகாளெ இப்பா ஜனங்ஙளா தெற்று குற்ற கீவத்தெ மாடிண்டித்துது.
அம்மங்ங, கடலிந்த ஒந்து மிருக ஹத்தி பொப்புது கண்டிங்; அதங்ங ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் உட்டாயித்து; அதன கொம்பாளெ ஹத்து கிரீடம் உட்டாயித்து; ஒந்நொந்து தெலேமேலெயும், தெய்வத அவமானபடுசா ஹெசறும் உட்டாயித்து.
நா கண்டா ஆ மிருக புள்ளித ஹாரும், அதன காலு கெறிடித காலின ஹாரும் உட்டாயித்து; அதன பாயெ சிங்கத பாயெ ஹாரும் உட்டாயித்து; அம்மங்ங, ஆ ராட்ச்சஸ ஹாவு தன்ன சக்தியும், தன்ன சிம்மாசன, அதிகார ஒக்க, ஆ மிருகாக கொட்டுத்து.
ராட்ச்சஸ ஹாவு ஆ மிருகாக அதிகார கொட்டித்தா ஹேதினாளெ ஜனங்ஙளு எல்லாரும் ஹாவின கும்முட்டுரு, “ஈ மிருகாக சமமாயிற்றெ உள்ளாவாங் ஏற? அதனகூடெ யுத்தகீவாக்க ஏற இத்தீரெ?” ஹளி ஹளிட்டு, மிருகத கும்முடத்தெகூடிரு.
அதுகளிஞட்டு, கண்டங்ங ஆச்சரியபடா ஹாற உள்ளா, ஒந்து தொட்ட அடெயாளத ஆகாசதாளெ கண்டிங்; அதனாளெ, ஏளு தூதம்மாரு ஆக்கள கையாளெ ஏளுவித உபத்தரத ஹிடுத்தித்துரு; தெய்வ, ஈ உபத்தரங்கொண்டு ஜனங்ஙளா சிட்ச்சிசிகளிவதாப்பங்ங, தன்ன அரிச பூரணமாயிற்றெ தீயிகு.
அம்மங்ங, ராட்ச்சஸ ஹாவின பாயெந்தும், மிருகத பாயெந்தும், கள்ள பொளிச்சப்பாடிமாரா பாயெந்தும், தவளெத ஹாற இப்பா மூறுவித துரால்ப்பமாவு ஹொறெயெ கடது பொப்புது கண்டிங்.
நீ, கண்டா ஹத்து கொம்பு, ஹத்து ராஜாக்கம்மாரா குறிக்கு; ஆக்காக இனியும் பரண அதிகார கிட்டிபில்லெ; எந்நங்ங, ஆக்காக ஆ மிருகதகூடெ கூடி ஒந்து மணிக்கூறு பரிப்பத்துள்ளா அதிகார மாத்தறே கிட்டுகொள்ளு.
நீ கண்டா ஹத்து கொம்பும், மிருகமுமாயிற்றெ இப்பாக்க ஒக்க, ஆ பேசித வெருப்புரு; எந்தட்டு, அவளகையி உள்ளுதொக்க ஹிடுத்துபறிச்சு, அவள பொருமேலோடெ மாடி, அவள எறச்சித திந்து, அவள கிச்சினாளெ ஹைக்கி சுடுரு.
அம்மங்ங, ஆ தூதங் நன்ன நோடிட்டு, “நீ ஆச்சரியபடுது ஏக்க? அவள பற்றிட்டுள்ளா சொகாரெயும், அவள ஹொத்தண்டு ஹோப்பா மிருகத பற்றிட்டுள்ளா சொகாரெயும் ஏன ஹளி, நா நினங்ங ஹளிதரக்கெ; ஆ மிருகாக ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் ஹடதெயல்லோ!
அவன கண்ணு, கிச்சுகெண்டலா ஹாற உட்டாயித்து; அவன தெலேமேலெ ஒந்துபாடு கிரீட உட்டாயித்து; பேறெ ஒப்புறிகும் மனசிலாகாத்த ஒந்து ஹெசறும் அவங்ங உட்டாயித்து.
அவங், ஹளே ஹாவாயிப்பா ஆ தொட்ட ஹாவின ஹிடுத்தட்டு, ஆயிர வர்ஷட்ட கெட்டிபீத்தாங்; ஆ ஹாவிக செயித்தானு, பிசாசு ஹளிட்டுள்ளா ஹெசறும் உட்டாயித்து.