7 எந்தட்டு பேறெ ஒப்பன ஊதட்டு, நீ ஏன கட பொடிசித்தெ? ஹளி கேட்டாங். அம்மங்ங அவங், நூரு மூட்டெ கோதம்பு பொடிசிஹடதெ ஹளி ஹளிதாங். செரி எந்நங்ங, நீ நின்ன சீட்டு எத்தி எம்பத்து மூட்டெ ஹளி பிரிக எளி; ஹளி ஹளிதாங்.
அந்த்தெ ஆ கெலசகாறங் தன்ன ஊரிக திரிச்சு ஹோப்பா சமெயாளெ, அவனகையிந்த நூரு தினாரி கட பொடிசித்தா தன்னகூடெ கெலசகீவா இஞ்ஞொந்து கெலசகாறன எடெபட்டெயாளெ கண்டட்டு, அவன ஹிடுத்து களுத்திக நெக்கிட்டு, ‘நன்னகையிந்த பொடிசிதா நூரு தினாரி ஹண கொண்டதா’ ஹளி ஹளிதாங்.
அம்மங்ங அவங், நூரு பரணி எண்ணெ பொடிசிதிங் ஹளி ஹளிதாங். எந்நங்ங நீ ஒந்து கெலசகீயி, நின்ன சீட்டு எத்தி ஐவத்து பரணி எண்ணெ ஒள்ளு பொடிசிது ஹளி பிரிக பிரிக எளி; ஹளி ஹளிதாங்.
அம்மங்ங, இவன கள்ளத்தர ஒக்க, மொதலாளி அருதட்டு, கள்ள கணக்கு ஹைக்கிதா தன்ன மேல்நோட்டக்காறனகூடெ, நீ தரக்கேடில்லெ! நினங்ஙுள்ளா காரெ ஒக்க, நீ புத்திபரமாயிற்றெ கீதண்டெ ஹளி ஹளிதாங்; அதே ஹாற தென்னெ தெய்வராஜெத ஜனங்ஙளா காட்டிலும், ஈ லோகதாளெ இப்பா ஜனங்ளு எல்லாரும் கூடுதலு புத்தி உள்ளாக்களாயி நெடதண்டீரெ.
அஜ்ஜிக எம்பத்தி நாக்கு வைசு உட்டாயித்து; ஆ அஜ்ஜி அம்பலந்த புட்டு ஹோகாதெ, ஜினோத்தும் தின்னாதெ நோம்பு இத்து, இரும் ஹகலும், பிரார்த்தனெ கீதண்டு தெய்வத பெகுமானிசிண்டித்தா.
அம்மங்ங ஆ மொதலாளி, மூறாமாத்த ஒப்பனகூடிங் ஹளாய்ச்சுபுட்டாங்; ஆக்க அவனும் ஹுயிது பொடுமாடி ஓடிசிபுட்டுரு.
அதுகளிஞட்டு ஏசு, ஜனங்ஙளிக பேறெ ஒந்து கதெ ஹளிகொட்டாங்; எந்த்தெ ஹளிங்ங, ஒப்பாங் ஒந்து முந்திரிதோட்ட நட்டு உட்டுமாடிட்டு செல கிறிஷிக்காறா கையி பாட்டாக கொட்டட்டு, கொறேஜின இத்தட்டு பரக்கெ ஹளிட்டு, தூரதேசாக ஹோதாங்.