4 ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளா ஆள்க்காறிக அறீக்கு ஹளிட்டுள்ளா ஒப்பாங், மறெவாயிற்றெ ஒந்து காரெ கீயனல்லோ? நீ இதொக்க மற்றுள்ளாக்க காம்பா ஹாற கீதங்ங, லோகக்காறிக நின்ன அறிவத்தெ எடெயாக்கல்லோ?” ஹளி ஹளிரு.
ஆக்க கீவுதன ஒக்க ஜனங்ஙளு காம்பத்தெபேக்காயி கீதண்டித்தீரெ; ஆக்க தெய்வ நேமதாளெ உள்ளா வஜனத எளிதி பெட்டியாளெ ஹைக்கி தெலேமேலெ கெட்டிபீத்தீரெ, ஆக்கள துணிக கெட்டா கண்ணித எறக்ககூட்டி, முத்துமணி கெட்டிபீத்தீரெ.
“நீ தெய்வத மங்ஙனாயித்தங்ங இல்லிந்த கீளேக சாடு! ஏனாக ஹளிங்ங, ‘தெய்வ நின்ன காப்பத்தெபேக்காயி, தன்ன தூதம்மாராகூடெ ஹளுகு; நின்ன காலிக கல்லு தட்டாதிப்பத்தெ பேக்காயி ஆக்க பந்தட்டு, கையாளெ தாஙி ஹிடுத்தம்புரு’ ஹளிட்டுள்ளுதும் எளிதி ஹடதெயல்லோ?” ஹளி கேட்டாங்.
“அதுமாத்தறல்ல, நிங்க நோம்பு இப்பா சமெயாளெ மாயக்காறா ஹாற முசினி பாடிசிண்டிப்பத்தெ பாடில்லெ. அந்த்தலாக்க ஏன கீதீரெ ஹளிங்ங, ஆக்க நோம்பு இப்புதன எல்லாரிகும் காட்டத்தெபேக்காயி முசினி பாடிசிண்டித்தீரெ. அந்த்தெ கீவாக்கள பல ஒக்க இல்லிதென்னெ தீத்து ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.
“அதே ஹாற தென்னெ நீ பிரார்த்தனெ கீவதாப்பங்ங, மாயக்காறா ஹாற கீவத்தெபாடில்லெ; அந்த்தலாக்க பிரார்த்தனெ மெனெயாளெயும், பட்டெகூடியும் ஒக்க நிந்நண்டு, ஆள்க்காரு காம்பத்தெபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதீரெ; ஆக்க கீதுதங்ஙுள்ளா பல ஒக்க இல்லிதென்னெ தீத்து ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.
அதே ஹாற ஒள்ளேவாங் தன்ன ஒள்ளேமனசிந்த ஒள்ளேதன கூட்டகூடுவாங், ஹொல்லாத்தாவாங் தன்ன ஹொல்லாத்த மனசிந்த ஹொல்லாத்துதன தென்னெ கூட்டகூடுவாங்; அவன மனசினாளெ உள்ளுது தால பாயெந்த கடெகு.
அதங்ங ஏசு அவனகூடெ, “ஈ லோகே அறிவா ஹாற எல்லா காரெயும் தொறது கூட்டகூடிதிங்; யூதம்மாரு கூடிபொப்பா பிரார்த்தனெ மெனெயாளெயும், அம்பலதாளெயும் பீத்து, ஏகோத்தும் கூட்டகூடிண்டித்திங்; சொகாரெயாயிற்றெ ஒந்தும் கூட்டகூடிபில்லெ.
ஏசின தம்மந்தீரு ஏசினகூடெ, “நீ இல்லிந்த யூதேயாக ஹோ! அம்மங்ங நீ கீவா காரெ ஒக்க நின்ன சிஷ்யம்மாரிக காங்கு.
ஏசின தம்மந்தீறிகும் தன்னமேலெ நம்பிக்கெ இல்லாத்துதுகொண்டாப்புது இந்த்தெ ஒக்க ஹளிது.