5 ஏசு நோடங்ங, கொறே ஆள்க்காரு தன்னப்படெ பொப்புது கண்டட்டு, “ஈமாரி ஆள்க்காறிக திம்பத்துள்ளா தொட்டி எல்லிந்த பொடுசுது?” ஹளி பிலிப்பினகூடெ கேட்டாங்.
அம்மங்ங சிஷ்யம்மாரு, “ஈ மருபூமியாளெ ஈமாரி ஆள்க்காறிக எல்லிந்த தீனி கொண்டுபந்து ஹொட்டெதும்ப கொடத்தெபற்றுகு?” ஹளி கேட்டுரு.
அந்த்தெ ஆக்க எல்லாரும் தோணியாளெ ஹத்தி, மருபூமியாளெ தனிச்சு ஒந்து சலாக ஹோதுரு.
ஆ சமெயாளெ பல சலாக ஹோயித்தா அப்போஸ்தலம்மாரு திரிஞு பந்தட்டு, ஆக்க கீதா எல்லா அல்புதங்ஙளா பற்றியும் ஏசினகூடெ பிவறாயிற்றெ கூட்டகூடிரு; அம்மங்ங ஏசு ஆக்கள மாத்தற கூட்டிண்டு தனிச்சு ஒந்து சலாளெ இருக்கு ஹளி பிஜாரிசிட்டு, பெத்சாயிதா பட்டணத அரியெ இப்பா ஒந்து மருபூமிக ஒப்புறிகும் காணாதெ ஹோதுரு.
பிற்றேஜின ஏசு கலிலாக ஹோப்பத்தெ பிஜாரிசிண்டிப்பங்ங பிலிப்பின கண்டட்டு அவனகூடெ, “நீ நன்னகூடெ பா!” ஹளி ஹளிதாங்.
பிலிப்பு ஹளாவாங் பெத்சாயிதா பாடக்காறனாயித்து, அந்திரேயா, பேதுரு ஹளாக்களும், அதே பாடக்காரு தென்னெயாப்புது.
பிலிப்பு நாத்தான்வேலின கண்டட்டு அவனகூடெ, “தெய்வ நேமபுஸ்தகதாளெ மோசேயும், பொளிச்சப்பாடிமாரும் ஹளிப்பாவன நங்க கண்டும்; அவங் ஜோசப்பின மங்ஙனும், நசரெத்து பாடக்காறனுமாயிப்பா ஏசு தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.
அதங்ங நாத்தான்வேலு, “நசரெத்திந்த நங்காக ஏனிங்ஙி ஒள்ளெ காரெ பொக்கோ?” ஹளி கேட்டாங்; அதங்ங பிலிப்பு, “பந்து நோடு!” ஹளி ஹளிதாங்.
அதங்ங நாத்தான்வேலு, “நினங்ங எந்த்தெ நன்ன கொத்துகிடுத்து?” ஹளி கேட்டாங். அதங்ங ஏசு, “பிலிப்பு நின்ன ஊளுதனமுச்செ, நீ அத்திமரத அடி இப்பங்ஙே நா நின்ன கண்டிங்” ஹளி ஹளிதாங்.
கூயிவத்தெ இனியும் நாக்குமாச உட்டு ஹளி ஹளீரல்லோ? எந்நங்ங நா ஹளுது, நோடிவா! பத்த பெளதட்டு கூயிவத்தெ ஆயிப்புது!