Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




யோவானு 1:17 - Moundadan Chetty

17 எந்த்தெ ஹளிங்ங, மோசெதகொண்டு தெய்வ நேம கிடுத்து; எந்நங்ங கருணெயும், சத்தியமும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு ஆப்புது நங்காக கிட்டிப்புது.

Δείτε το κεφάλαιο αντίγραφο




யோவானு 1:17
37 Σταυροειδείς Αναφορές  

ஆ வாக்காயி இப்பாவாங் மனுஷனாயி நங்களப்படெ பந்நா; அவங் கருணெயும், சத்தியம் உள்ளாவனாயி நங்களகூடெ இத்தாங்; நங்க அவன பெகுமானத கண்டும்; தன்ன அப்பன ஒந்தே மங்ங ஹளிட்டுள்ளா அடிஸ்தானதாளெ ஆப்புது அவங்ங ஆ பெகுமான கிட்டிப்புது.


ஏசு அவனகூடெ, “பட்டெயும், சத்தியவும், ஜீவிதும் நா தென்னெயாப்புது. நன்னகூடி அல்லாதெ ஒப்பனும் அப்பனப்படெ ஹோப்பத்தெபற்ற.


அம்மங்ங பிலாத்து, “அந்த்தெ ஆதங்ங நீ ராஜாவு தென்னெயாப்புது அல்லோ?” அதங்ங ஏசு, “நன்ன ராஜாவு ஹளி நீனே ஹளுதாப்புது; எந்நங்ங சத்தியதபற்றி கூட்டகூடுதாப்புது நன்ன கெலச; அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது நா ஹுட்டிதும், ஈ லோகாக பந்திப்புதும்; சத்தியதபக்க உள்ளாக்க ஒக்க நன்ன வாக்கு கேட்டு அனிசரிசி நெடதீரெ” ஹளி ஹளிதாங்.


நன்ன அப்பன முந்தாக நா நிங்களபற்றி குற்ற ஹளுவிங் ஹளி பிஜாருசுவாட; நங்கள பக்க நில்லத்தெ ஒப்பாங் இத்தீனெ ஹளி நிங்க பிஜாரிசிண்டு இத்தீரல்லோ, ஆ மோசே தென்னெ நிங்களபற்றி குற்ற ஹளுவாங்.


மோசே நிங்காக தெய்வ நேமத தந்நனல்லோ? எந்நங்ங நிங்க ஒப்புரும் தெய்வ நேமத கைக்கொண்டு நெடிவுதில்லெ; எந்தட்டும் நன்ன ஏனாக கொல்லத்தெநோடுது?” ஹளி ஹளிதாங்.


சத்திய ஏன ஹளியும் மனசிலுமாடுரு; ஆ சத்திய நிங்கள ஹிடிபுடுசுகு” ஹளி ஹளிதாங்.


மோசேதகூடெ தெய்வ கூட்டகூடித்து ஹளி நங்காக கொத்துட்டு; எந்நங்ங ஈ மனுஷங் எல்லிந்த பந்துது ஹளி நங்காக கொத்தில்லெ” ஹளி ஹளிரு.


அதங்ஙபேக்காயி ஆக்க ஒந்துஜின ஏற்பாடு கீதுரு; அம்மங்ங, கொறே ஆள்க்காரு பவுலு தங்கித்தா மெனேக பந்துரு; பவுலு, பொளாப்பங்ங தொடங்ஙி சந்நேரட்ட மோசேத தெய்வ நேமந்தும், பொளிச்சப்பாடு புஸ்தகந்தும் ஏசினபற்றிட்டுள்ளா காரெ எத்தி கூட்டகூடிட்டு, தெய்வராஜெத பற்றியும் விஸ்தாரமாயிற்றெ எத்தி ஹளிதாங்.


மருபூமியாளெ இஸ்ரேல்ஜன சபெயாயி கூடித்தா சமெயாளெ, மோசேகூடெ கூட்டகூடிதா தூதம்மாரிகும், நங்கள கார்ணம்மாரிகும் எடநடு நிந்நாவனும் இவங்தென்னெ ஆப்புது; நங்காக ஜீவுசத்துள்ளா ஜீவவஜன சீனாய் மலெந்த பொடிசி தந்நாவனும் ஈ மோசே தென்னெயாப்புது.


நிங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங, தெற்று குற்றதாளெ பண்டு குடிங்ஙிதா ஹாற இனி குடுங்ஙரு; ஏனாக ஹளிங்ங, பண்டு நிங்க தெய்வ நேமத அனிசரிசி நெடிவாக்களாயித்துரு; இந்து நிங்க தெய்வத கருணெ அனிசரிசி நெடதீரல்லோ!


எந்த்தெ ஹளிங்ங, நங்காக கீதுதரக்கெ ஹளி தெய்வ ஹளிதா வாக்கின, தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின ஹளாயிச்சட்டு பூரணமாயிற்றெ கீதிப்பா ஹேதினாளெ, தாங் ஹளிதன ஒக்க, தீர்ச்செயாயிற்றும் கீது தக்கு ஹளி நங்காக நம்பக்கெயல்லோ?


அதுகொண்டு நா இதனாளெந்த நிங்காக மனசிலுமாடி தப்புது ஏன ஹளிங்ங, பண்டு தெய்வ அப்ரகாமினகூடெ ஒந்து ஒப்பந்த கீதுகளிஞுத்து; அந்த்தெ இப்பங்ங, நாநூறா மூவத்து வர்ஷ களிஞட்டு இஸ்ரேல்காறிக கொட்டா நேமதகொண்டு, ஆ ஒப்பந்தத அர்த்த இல்லாதெ மாடத்தெபற்ற; அந்த்தெ இல்லாதெ மாடித்தங்ங, தெய்வ ஹளிதா வாக்கே நிவர்த்தி கீயாத்த ஹாற ஆயிண்டு ஹோக்கல்லோ?


அந்த்தெ ஆ நேமப்பிரகார எல்லதும் சோரெகொண்டு தென்னெயாப்புது சுத்திபருசுது; சோரெ உள்ளா ஹரெக்கெ களியாதெ தெற்று குற்றாக மாப்பு இல்லெ.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις