Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




எபேசியம்மாரு 5:3 - Moundadan Chetty

3 அதுமாத்தற அல்ல, பேசித்தர கீவுது, அத்தியாக்கிர காட்டுது, இந்த்தல பிறித்திகெட்ட காரெ கீவாக்க ஹளிட்டுள்ளா ஹெசறு ஒந்தும் கேள்சாதெ, நிங்க ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா.

Δείτε το κεφάλαιο αντίγραφο




எபேசியம்மாரு 5:3
58 Σταυροειδείς Αναφορές  

மனசிந்தே, அந்த்தல ஹொல்லாத்த சிந்தெ, கொலெ, பேசித்தர, சூளெத்தர, களவு, கள்ளசாட்ச்சி, தூஷணவாக்கு, இந்த்தலதொக்க ஹொறெயெ கடது பொக்கு.


எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “சொத்துமொதுலு சம்பாருசத்தெ பேக்காயி மாத்தற ஜீவுசுவாட. ஜாகர்தெயாயிற்றெ இரிவா! ஏனாக ஹளிங்ங, ஒப்பங்ங ஒந்துபாடு சொத்துமொதுலு இத்தங்ஙும் அது அவங்ங எதார்த்தமாயிற்றுள்ளா ஜீவித அல்ல.


அம்மங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரிக ஹளி கொட்டண்டித்துதன ஒக்க கேட்டண்டித்தா பரீசம்மாரு ஹண ஆசெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசின பரிகாசகீது சிரிப்பத்தெகூடிரு.


எந்நங்ங, பிம்மாக பூசெகளிச்சா அசுத்தி உள்ளுதன திம்பத்தெபாடில்லெ; சோரெதும் திம்பத்தெபாடில்லெ; ஏனாக ஹளிங்ங, அதன சோரெ ஹொறெயெ கடதுஹோகாத்துது கொண்டு, சோசமுட்டி சத்தா ஏதன எறெச்சியும் திம்பத்தெபாடில்லெ; பேசித்தர கீவத்தெபாடில்லெ ஹளியும், ஆக்காக நங்க கத்து எளீக்கு.


நா ஒப்பன கையிந்தும் பெள்ளியோ, ஹொன்னோ, துணிமணியோ கிட்டுக்கு ஹளி ஆசெபட்டுபில்லெ.


அந்த்தலாக்க எல்லாவித அன்னேய, பேடாத்த சிந்தெ, துஷ்டத்தர, அத்தியாக்கிர, துர்புத்தியும் உள்ளாக்களாப்புது; அதுமாத்தறல்ல, ஹொட்டெகிச்சு, கொலெகீவா சிந்தெ, பெணக்க, கபட புத்தி, அக்கறம,


தெய்வகெலச கீவா ஆள்க்காறிக கொடத்துள்ளா மரியாதெயோடெ அவள சீகரிசி, அவாக பேக்காத்து ஒக்க கீதுகொடிவா; ஏனாக ஹளிங்ங அவ நனங்ஙும், மற்று பலரிகும் பல சகாய கீதித்தாளெ.


பண்டு நிங்கள சரீரத, ஏதொக்க தெற்று கீவத்தெ உபயோகிசிறோ, அதொக்க இந்து நீதியுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வதகையி ஏல்சிகொடிவா; ஏனாக ஹளிங்ங நிங்க ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்துகளிஞட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ எத்து ஜீவிசிண்டித்தீரெயல்லோ!


ஏனாக ஹளிங்ங, ஆக்க அந்த்தெ பேசித்தர கீது ஜீவிசிதா ஹேதினாளெ ஆக்களாளெ இப்பத்தி மூவாயிர ஆள்க்காரு ஒந்தேஜின சத்துரு; நிங்காக அதே ஹாற சம்போசாதெ இருக்கிங்ஙி ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா.


அதுமாத்தறல்ல, நிங்கள எடேக ஒப்பாங் பேசித்தர கீதீனெ ஹளி நா கேட்டிங்; அதும் தன்ன கிறவ்வெதே கூட்டிண்டு நெடிவுதம்ப; இத்தர பிறித்திகெட்ட காரெ, ஏசினபற்றி அறியாத்த ஆள்க்காருகூடி கீயறல்லோ?


ஏனாக ஹளிங்ங, ‘ஹொட்டெக பேக்காயி தீனியும், தீனிக பேக்காயி ஹொட்டெயும்’ ஹளி ஹளிப்பா வாக்கு சத்திய தென்னெ ஆயித்தங்ஙும், இது எருடும் நசிச்சு ஹோக்கு. எந்நங்ங நங்கள சரீரத, தெய்வ உட்டுமாடிது பேசித்தராக பேக்காயிற்றெ அல்ல; அதனபகர ஏசுக்கிறிஸ்திக பேக்காயிற்றெ ஜீவுசத்தெ ஆப்புது தெய்வ உட்டுமாடிப்புது; அதுகொண்டு நங்கள சரீரதமேலெயும் தெய்வாக அதிகார உட்டல்லோ?


அதுகொண்டு, பேசித்தரத புட்டு மாறிவா; மனுஷம்மாரு கீவா எல்லா தெற்றும் ஆக்கள சரீரந்த புட்டு ஹொறெயெ உள்ளுதாப்புது; எந்நங்ங பேசித்தர ஹளுது அவன சரீராகே எதிராயிற்றெ உள்ளா குற்றத ஆப்புது கீவுது.


நா நிங்களப்படெ திரிச்சும் பொப்பதாப்பங்ங நன்ன தெய்வ நிங்கள முந்தாக தெலெ தாத்தத்தெ மாடுகோ? ஹளி அஞ்சீனெ; ஏனாக ஹளிங்ங, பண்டு குற்ற கீதாக்களாளெ ஒந்துபாடு ஆள்க்காரு, ஆ ஹளே அசுத்தியாளெயும், பேசித்தரதாளெயும், சூளெத்தரதாளெயும் இப்புது கண்டு, நா அளத்தெவேண்டிபொக்கோ ஹளி அஞ்சிண்டிப்புதாப்புது.


ஏனாக ஹளிங்ங, ஆக்க ஒப்புறிகும் காணாத்த ஹாற கீவா காரெ ஒக்க ஹொறெயெ ஹளத்தெகூடி பற்றாத்த நாணங்கெட்டா காரெ ஆப்புது.


ஏனாக ஹளிங்ங, பேசித்தர கீவுது, அத்தியாக்கிர காட்டுது, இந்த்தல பிறித்திகெட்டாக்களாயி ஜீவுசாக்க ஒக்க, தெய்வத அல்ல கும்முடுது, பிம்மத ஆப்புது கும்முடுது; அந்த்தலாக்க தெய்வராஜெக ஹோகாரரு ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ!


நிங்க கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமானாக ஏற்றா ஹாற மாத்தற நெடதணிவா; நா நிங்களப்படெ பந்தட்டு, நிங்கள கண்டங்ஙும் செரி, நிங்கள நெலவார ஒக்க தூரந்த கேட்டங்ஙும் செரி, ஒள்ளெவர்த்தமானகொண்டு நிங்காக கிட்டிதா நம்பிக்கெத புட்டுடாதெ, நிங்களகூடெ எதிர்த்து ஹளாக்கள முந்தாக நிங்க ஒரிமெ உள்ளாக்களாயி மனசொறச்சு நில்லிவா.


அதுகொண்டு பேசித்தர கீதண்டு நெடிவுது, பிறித்திகெட்டாக்களாயி நெடிவுது, அசுத்தமாயிற்றுள்ளா ஆசெபீத்தண்டு நெடிவுது, சரீரப்பிரகார உள்ளா பேடாத்த ஆசெபீத்தண்டு நெடிவுது, பிம்மத கும்முடுதங்ங சமமாயிற்றுள்ளா சொத்துமொதுலின மேலெ ஆசெபீத்தண்டு நெடிவுது ஹளிட்டுள்ளா ஈ லோகபரமாயிற்றுள்ளா இந்த்தல சொபாவத நிங்கள ஜீவிதந்த ஹம்மாடுக்கு.


எந்த்தெ ஹளிங்ங, நங்க எல்லாரும் பரிசுத்தமாயிற்றெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தெய்வத இஷ்ட; அதுகொண்டு பேசித்தரமாயிற்றுள்ளா எல்லா காரெதும் புட்டுமாறி,


ஏனாக ஹளிங்ங, தெய்வ நங்கள தெரெஞ்ஞெத்திப்புது, நங்கள பரிசுத்தமாடத்தெ பேக்காயி ஆப்புது, அசுத்தனாயிற்றெ ஆப்பத்தெக அல்ல.


ஹிந்தெ எந்த்தெ ஹளிங்ங, தெய்வபக்தி உள்ளா ஹெண்ணாக நெடிவா ஹாற, ஒள்ளெ பிறவர்த்தி உள்ளாக்களாயிற்றெ ஜீவிசி காட்டுக்கு; இதாப்புது செரியாயிற்றுள்ளா அலங்கார.


அவங் சாராக குடியாத்தாவனும், ஹூலூடி கூடாத்தாவனும், பொருமெ உள்ளாவனும், மற்றுள்ளாக்களகூடெ தர்க்கிசாத்தாவனும், ஹண ஆசெ இல்லாத்தாவனாயிற்றும் இருக்கு.


சகல நாசாகும் தாய்வேரின ஹாற உள்ளுது ஈ, சொத்துமொதுலின ஆக்கிர தென்னெயாப்புது; செலாக்க இதங்ங பேக்காயி தங்கள தெய்வ நம்பிக்கெத ஹம்மாடிட்டு, ஆக்காக ஆக்களே பல கஷ்டத பரிசி பீத்தண்டீரெ.


எந்த்தெ ஹளிங்ங, மனுஷம்மாரு தன்னபோற்றி சொபாவ உள்ளாக்களாயும், சொத்துமொதுலின ஆக்கிர உள்ளாக்களாயும், வீம்பு ஹளாக்களாயும், அகங்கார உள்ளாக்களாயும், மரியாதி இல்லாதெ கூட்டகூடாக்களாயும், அவ்வெஅப்பன அனுசருசாத்தாக்களாயும், நண்ணி இல்லாத்தாக்களாயும், அசுத்தம்மாராயும்,


முந்தெ அந்த்தலாக்கள பாயெத அடக்குக்கு, ஏனாக ஹளிங்ங ஈக்க கள்ள பட்டெயாளெ ஹண சம்பாருசத்தெ பேக்காயி தெற்றாயிற்றுள்ளா காரெத உபதேசகீது, ஒந்து குடும்பதாளெ உள்ளாக்கள ஒக்க நாச மாடீரெ.


ஏனாக ஹளிங்ங, சபெயாளெ உள்ளா மேல்நோட்டக்காறங் தெய்வத கெலசகீவத்தெ தகுதி உள்ளாவனாயிற்றெ இருக்கிங்ஙி, அவன மற்றுள்ளாக்க குற்ற ஹளாத்த ஹாற நெடீக்கு; அகங்கார இல்லாத்தாவனாயும், முன்கோப இல்லாத்தாவனாயும், சாராக குடியத்தாவனாயும், ஹூலூடி கூடத்தாவனாயும், பளெஞ்ஞ பட்டெயாளெ சம்பாருசாத்தாவனாயும் இருக்கு.


அதே ஹாற தென்னெ வைசிக தொட்ட ஹெண்ணாக, ஒள்ளெ சொபாவ உள்ளாக்களாயி இப்பத்தெகும், பரிசுத்தமாயிற்றெ நெடிவத்தெகும், ஏஷணி ஹளி நெடியாதெயும், கள்ளு குடியாத்தாக்களாயும், ஒள்ளெ காரெ படிசிகொடாக்களாயும் இருக்கு.


நிங்களாளெ ஒப்புரும் காம சிந்தெ உள்ளாக்களாயிற்றெ நெடிவாட; தெய்வாக அஞ்சிக்கெ இல்லாத்த ஏசாவின ஹாற நெடிவாட, ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; அவங் ஒந்து நேர தீனிக பேக்காயி தெலெக்குட்டி மங்ங ஹளிட்டுள்ளா அவகாசத நஷ்டப்படிசிதாவனாப்புது.


அதுகொண்டு, நிங்கள பொருப்பினாளெ இப்பா ஆடுகூட்டத ஹாற உள்ளா தெய்வஜனத ஒயித்தாயி நோடியணிவா; நிர்பந்தங்கொண்டு அல்ல, மனப்பூர்வமாயிற்றெ கெலசகீயிவா; சம்பளாக பேக்காயிற்றெ அல்ல கீயபேக்காத்து; சந்தோஷமாயிற்றெ கெலசகீயிவா.


பிறித்தியேகிச்சு பேடாத்த ஆசெத மனசினாளெ பீத்தண்டு, கீவத்தெ பாடில்லாத்த காரெ கீவாக்காகும், தெய்வத அதிகாரத பெலெ பீயாத்த ஆள்க்காறிகும் அந்த்தல சிட்ச்செத தெய்வ பீத்துஹடதெ; இந்த்தலாக்க ஒந்நங்ஙும் அஞ்சிக்கெ இல்லாத்தாக்களும், அகங்கார ஹெச்சிதாக்களும், தெய்வ நேமிசிதா அதிகாரதகூடி மதியாத்தாக்களும் ஆப்புது.


சூளெத்தர கீவா பிஜாரதாளெ உள்ளா இந்த்தலாக்க மனசொறப்பு இல்லாத்த ஹெண்ணாகள ஏமாத்தி கைவச மாடாக்களாப்புது; இந்த்தல தெற்று குற்ற கீவுதன புடரு; துராக்கிர ஹெச்சிதா ஈக்க சாப ஹிடுத்தாக்களாப்புது.


பயங்கர கண்ணாசெ ஹிடுத்தா ஆக்க தந்தறபரமாயிற்றெ நிங்கள ஹணத ஏமாத்துரு; தெய்வ ஆக்காக தீர்ச்செயாயிற்றும் சிட்ச்செ கொடுகு.


எந்நங்ங, நின்னகையி செல கொறவுள்ளுதாயிற்றெ நா கண்டீனெ; பிலேயாமின உபதேசதாளெ நெடிவா செலாக்க நிங்கள எடநடுவு இத்தீரெ; ஆ பிலேயாமு ஹளாவாங், பாலாக்கு ஹளாவங்ங இஸ்ரேல்ஜன நசிப்பத்துள்ளா பட்டெத ஹளிகொட்டாவனாப்புது; அதுகொண்டு, ஆக்க பிம்மாக பூசெகளிச்சுதன திந்து பேசித்தர கீவத்தெகூடிரு.


அவ, மனசுதிரிஞ்ஞு பொப்பத்தெபேக்காயி, நா அவாக தவணெ கொட்டித்திங்; எந்நங்ங, அவள பேசித்தரந்த புட்டு மனசுதிரிவத்தெ அவாக மனசில்லெ.


எந்நங்ங, தைரெ இல்லாத்தாக்க, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்க, தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்க, கொலெகாரு, பேசித்தர கீவாக்க, மந்தறவாதிமாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளு ஹளாக்க இந்த்தெ உள்ளா எல்லாரினும், எறடாமாத்த மரண ஹளா கிச்சும், கெந்தகும் கத்திண்டிப்பா கடலாளெ தள்ளுவிங்” ஹளி ஹளிதாங்.


நெடத்தெ கெட்டாக்க, மந்தறவாத கீவாக்க, பேசித்தர கீவாக்க, கொலெகாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளாயிற்றுள்ளா காரெ இஷ்டப்படாக்களும், அதனபிரகார நெடிவாக்களும் ஆ பட்டணதாளெ ஹுக்கத்தெ அனுவாத இல்லெ.


ஆக்க கீதண்டித்தா கொலெ, களவு, மந்தறவாத, பேசித்தர, இதொந்நனும் புட்டு மாறத்தெ ஆக்காக மனசு இல்லெ ஆயித்து.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις