6 ஏனாக ஹளிங்ங, தெய்வ வஜனத அனிசரிசாதெ இந்த்தல பேடாத்த பிறவர்த்தி கீதண்டு நெடிவாக்களமேலெ ஆப்புது தெய்வகோப பொப்பத்தெ ஹோப்புது.
தெய்வத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருசத்தெ புடாத்த ஆள்க்காரு கீவா எல்லாவித துஷ்டத்தராகும், சொர்க்கந்த தெய்வகோப ஆக்களமேலெ பொப்பத்தெ ஹோத்தெ.
இந்த்தலதொக்க கீதங்ஙும் தெற்றொந்து அல்ல, ஹளி நிங்கள ஒப்பனும் ஏமாத்தாதெ இருக்கிங்ஙி ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; இந்த்தல பேடாத்த காரெ ஒக்க கீதண்டு, தெய்வத வாக்கிக அனிசரெணெ இல்லாதெ நெடிவா ஆள்க்காறிக தெய்வ சிட்ச்செ கொடுகு.
முந்தெ நிங்க சத்திய இஞ்ஞேதாப்புது ஹளி அறியாத்த காலகட்டதாளெ பேடாத்த ஆசெபீத்தண்டு நெடதா ஹாற இனி நெடியாதெ, தெய்வாக அனிசரெணெ உள்ளா மக்களாயி நெடதணிவா.
சூளெத்தர கீவா பிஜாரதாளெ உள்ளா இந்த்தலாக்க மனசொறப்பு இல்லாத்த ஹெண்ணாகள ஏமாத்தி கைவச மாடாக்களாப்புது; இந்த்தல தெற்று குற்ற கீவுதன புடரு; துராக்கிர ஹெச்சிதா ஈக்க சாப ஹிடுத்தாக்களாப்புது.
நெடத்தெ கெட்டாக்க, மந்தறவாத கீவாக்க, பேசித்தர கீவாக்க, கொலெகாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளாயிற்றுள்ளா காரெ இஷ்டப்படாக்களும், அதனபிரகார நெடிவாக்களும் ஆ பட்டணதாளெ ஹுக்கத்தெ அனுவாத இல்லெ.