11 ஏனாக ஹளிங்ங, தெய்வத சத்திய பட்டெயாளெ நெடீக்கு ஹளிட்டுள்ளா மனசு ஆக்காக இல்லாத்துதுகொண்டு, ஆ துஷ்டன பொள்ளாயிற்றுள்ளா காரியங்ஙளா நம்பத்தெ தெய்வ ஆக்கள ஏல்சிகொட்டுத்து.
ஆ சமெயாளெ பல கள்ளபொளிச்சப்பாடிமாரு ஹொஸ்தாயி பந்தட்டு, ஒந்துபாடு ஆள்க்காறா தெய்வத பட்டெந்த தெரிசி அலெவத்தெ மாடுரு.
ஏனாக ஹளிங்ங, பலரும் நன்ன ஹெசறு ஹளிண்டு, ‘நானாப்புது கிறிஸ்து’ ஹளி ஹளிண்டு பல ஆள்க்காறினும் பட்டெ தெரிசுரு.
தெய்வதபற்றி அறிவத்தெகும், அதன ஏற்றெத்தத்தெகும் ஆக்காக மனசில்லாத்துதுகொண்டு, ஆக்கள ஆசெபிரகார பேடாத்த காரெ கீயட்டெ ஹளி தெய்வ ஆக்கள புட்டுடுத்து.
அல்லாதெ தெற்றாயிற்றுள்ளா உத்தேசங்கொண்டோ, நிங்கள எல்லிங்ஙி கொண்டு ஹோயி குடுக்குக்கு ஹளிட்டோ அல்ல; ஒள்ளெ பிஜாரத்தோடு தென்னெயாப்புது ஹளிது ஹளி மனசிலுமாடியணிவா.
இஞ்ஞி பொப்பத்துள்ளா காலதாளெ செலாக்க, தங்கள தெய்வ நம்பிக்கெத புட்டட்டு, பொள்ளு ஹளி ஏமாத்தா ஆல்மாவின உபதேசாகும், பிசாசின உபதேசாகும் அனிசரிசி ஹோயுடுரு ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு வளரெ செரியாயிற்றெ ஹளி ஹடதெ.
அந்த்தெ ஆக்க சத்திய உபதேச கேளுதன புட்டு, கெட்டுக்கதெக சாஞு ஹோப்புரு.