17 அதுகளிஞட்டு ஜீவோடெ இப்பா நங்கள மேலெந்த மோட பலிச்சு எத்தியங்கு; அந்த்தெ நங்களும், ஆக்களகூடெ சேர்ந்நம்மு; அந்த்தெ நங்க எல்லாரும் ஏகோத்தும் எஜமானனகூடெ ஜீவுசுவும்.
அம்மங்ங ஏசு, “ஹூம் நீ ஹளிதா ஹாற அது நா தென்னெயாப்புது; அதுமாத்தறல்ல, மனுஷனாயி பந்தா நா சர்வசக்தி உள்ளா தெய்வத பலபக்க குளுதிப்புதும், மோடதமேலெ பொப்புதனும் இந்துமொதுலு நிங்க காம்புரு ஹளி, நா நிங்கள எல்லாரினகூடெயும் ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஏசு, “அது நா தென்னெயாப்புது; அதுமாத்தறல்ல மனுஷனாயி பந்தா நா சர்வசக்தி உள்ளா தெய்வத பலபக்க குளுதிப்புதும், மோடதமேலெ பொப்புதும் நிங்க காம்புரு” ஹளி ஹளிதாங்.
நனங்ங சிஷ்யனாயிற்றெ இருக்கு ஹளி பிஜாருசாக்க நா ஹளிதன ஒக்க கைக்கொண்டு நெடெயட்டெ; நா எல்லி இத்தீனெயோ அல்லிதென்னெ நன்ன கெலசகாறனும் இப்பாங்; நனங்ஙபேக்காயி ஒப்பாங் கெலசகீவுதாயித்தங்ங நன்ன அப்பாங் அவன பெகுமானுசுவாங்” ஹளி ஹளிதாங்.
நா ஹோயி, நிங்காக பேக்காயிற்றெ சல ஒரிக்கிகளிஞட்டு, நா இப்பா சலாளெ நிங்களும் இப்பத்தெ, நா ஹிந்திகும் பந்தட்டு நிங்கள நன்னப்படெ கூட்டிண்டுஹோப்பிங்.
அப்பா! ஈ லோக உட்டாப்புதன முச்செ நீ நன்னமேலெ சினேகபீத்து, நன்ன பெகுமானிசித்தெ. நீ நன்னகையி ஏல்சிதந்தா ஆள்க்காரும் ஆ பெகுமானத காம்பத்தெ பேக்காயிற்றெ, நா இப்பா சலாளெ ஆக்களும் நன்னகூடெ இருக்கு ஹளி நா ஆக்கிருசுதாப்புது.
ஏசு ஆக்களகூடெ இதொக்க ஹளிகளிஞட்டு ஆக்கள கண்ணா முந்தாக தென்னெ சொர்க்காக ஹத்தி ஹோதாங்; அம்மங்ங ஒந்து மோட பந்து ஆக்கள கண்ணிக மறெச்சுத்து; ஆ மோடகூடி ஏசு சொர்க்காக ஹத்தி ஹோதாங்.
ஆக்க நீரிந்த கரெ ஹத்ததாப்பங்ங, தெய்வால்ப்மாவு பிலிப்பின கொண்டு ஹோயுடுத்து; மந்திரி ஹிந்தெ அவன கண்டுபில்லெ; எந்நங்ங அவங், கூடுதலு சந்தோஷத்தோடெ பட்டெகூடி ஹோதாங்.
கடெசி தூதங் கொளலு உருசா சமெயாளெ, ஏசுக்கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ பீத்து சத்தாக்க நசிச்சு ஹோகாதெ, எல்லாரும் ஜீவோடெ ஏளுரு; அதுகளிஞட்டு, ஜீவோடெ இப்பா நங்களும் எல்லாரும் ரூப மாறுவும்; கண்ணடெச்சு கண்ணு தொறெவா நேரங்கொண்டு இதொக்க சம்போசுகு.
ஆ தைரெ நங்காக உள்ளுதுகொண்டு, ஈ சரீரந்த புட்டு, ஹொசா சரீரத்தோடு எஜமானினகூடெ இப்பத்தெ ஆக்கிரிசீனு.
நா இது எருடு ஆக்கிரத எடநடுவுள்ளா ஹிடிபலியாளெ ஆப்புது இப்புது. நா சத்துகளிஞட்டு, கிறிஸ்தினகூடெ இப்புதாயிக்கு நனங்ங ஒள்ளேது ஹளி நா ஆக்கிருசுதாப்புது; ஏனாக ஹளிங்ங அதாப்புது ஏற்றும் ஒள்ளேது.
அந்த்தெ நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்து தன்ன பரிசுத்தம்மாரு எல்லாரினும் கூடெ பொப்பதாப்பங்ங, நங்கள அப்பனாயிப்பா தெய்வத காழ்ச்செயாளெ நிங்க தெற்று குற்ற இல்லாத்த பரிசுத்தம்மாராயி நில்லத்தெக எஜமானு நிங்கள மனசிக பெல தரட்டெ.
அதுகொண்டாப்புது எஜமானனாயிப்பா ஏசு திரிச்சு பொப்பா சமெயாளெ சத்தாக்க முந்தெ ஏசினகூடெ சேருரு ஹளியும், அதுகளிஞட்டு ஜீவோடெ இப்பா நங்க எல்லாரும் ஆக்களகூடெ சேருவும் ஹளி நிங்களகூடெ ஹளுது.
அதுகொண்டு சத்தாக்களபற்றி பேஜாரஹிடுத்தண்டு இப்பாக்களகூடெ, ஈ காரியங்ஙளு ஒக்க கூட்டகூடி ஆக்கள மனசிக ஆசுவாசபடிசிவா.
அதுகொண்டு, ஏசு திரிச்சு பொப்பதாப்பங்ங, நங்க ஜீவோடெ இத்தங்ஙும் செரி, பொப்புதனமுச்செ சத்தண்டு ஹோயித்தங்ஙும் செரி, தன்னகூடெ சேர்ந்நு எந்தெந்தும் ஜீவுசத்தெபேக்காயாப்புது ஏசுக்கிறிஸ்து நங்காக பேக்காயிற்றெ சத்துது.
அந்த்தெ தெய்வ ஹளிதா வாக்குபிரகார சத்தியநேரு உள்ளாக்க மாத்தற ஜீவுசா ஹொசா ஆகாசங்ஙளும், ஹொசா பூமியும் பொக்கு ஹளி காத்தண்டித்தீனு.
“இத்தோல! அவங் மோடதமேலெ ஹத்தி பந்நீனெ; எல்லாரும் அவன காம்புரு; அவன குத்தி தொளெச்சா ஆள்க்காரும் அவன காம்புரு; பூமியாளெ உள்ளா எல்லாரும் அவன காமங்ங ஹாடிஅளுரு; அந்த்தெ தென்னெ நெடிகு; அது சத்திய.
அம்மங்ங, சொர்க்கந்த ஒந்து ஒச்செ, “இல்லிக ஹத்திபரிவா!” ஹளி ஹளிதன, ஆ பொளிச்சப்பாடிமாரு இப்புரும் கேட்டுரு; அந்த்தெ ஆக்கள சத்துருக்களு எல்லாரும் நோடிண்டிப்பங்ஙே, ஆக்க மோடகூடி சொர்க்காக ஹத்தி ஹோதுரு.
அம்மங்ங ஆ ஹெண்ணு, எல்லா நாடினும் இரும்பு கோலாளெ ஹுயிது ஒடிக்கி, பரிப்பத்துள்ளா ஒந்து கெண்டுமைத்தித ஹெத்தா; அவள மைத்தித ஹாவு முணுங்ஙாத்த முச்செ, பெட்டெந்நு ஒந்து தூதங் பந்தட்டு தெய்வதப்படெகும், தெய்வத சிம்மாசனத முந்தாகும், ஆ மைத்தித கொண்டுஹோதாங்.