Online Bibel

- Annoncer -




ரோமர் 4:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 அத்தோடு விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களில் ஒரு சாராருக்கும் அவர் தகப்பனாக இருக்கின்றார். இவர்கள் வெறுமனே விருத்தசேதனம் செய்தவர்களாய் மாத்திரம் இராமல், எமது தந்தையாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ள முன்னதாக நடந்த அதே விசுவாச அடிச் சுவட்டிலே நடப்பவர்களாயும் இருப்பவர்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்கும் அவர் தந்தையாகக் கருதப்படுகிறார். இதில் அவர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டதால் மட்டும் ஆபிரகாம் தந்தையாகவில்லை. ஆபிரகாம் விருத்தசேதனம் செய்துகொள்ளுமுன் வைத்திருந்த விசுவாசத்தைப் போன்று அவர்களும் விசுவாசம் வைத்திருந்ததால் ஆபிரகாம் அவர்களது தந்தையானான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

Se kapitlet Kopi




ரோமர் 4:12

Følg os:

Annoncer


Annoncer