Online Bibel

- Annoncer -




வெளிப்படுத்தல் 2:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஆனாலும், நான் உன்னில் சில குறைகளைக் காண்கின்றேன்: பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கின்றவர்கள் உன் நடுவே இருக்கின்றார்கள். இவனே இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை உண்ணச் செய்து, அவர்களை பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடச் செய்து, பாவத்திற்குள் விழச் செய்வதற்காக பாலாக் என்ற அரசனுக்குக் கற்றுக் கொடுத்தவன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

14 “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

Se kapitlet Kopi




வெளிப்படுத்தல் 2:14

Følg os:

Annoncer


Annoncer