எபேசியர் 2:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஏனெனில் இரு பிரிவினராக இருந்த நம்மிடையே உள்ள சமாதானம் கிறிஸ்துவே. அவரே இரு பிரிவினரையும் ஒன்றாக்கித் தடையாயிருந்த பகைமைச் சுவரைத் தமது சரீர மரணத்தினாலே தகர்த்து, Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். Se kapitletபரிசுத்த பைபிள்14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, Se kapitlet |