Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 7:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அதற்கு அவன் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம், ஆரானிலே வாழ்வதற்கு முன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தபோதே மகிமையின் இறைவன் அங்கே அவருக்குக் காட்சியளித்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

2 ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 7:2

Følg os:

Annoncer


Annoncer