2 தீமோ 3:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 எப்படி, உன் குழந்தைப் பருவத்திலிருந்தே பரிசுத்த வேதவசனங்களை நீ அறிந்து வைத்திருக்கின்றாய் என்பதுவும் உனக்குத் தெரியும். அவை கிறிஸ்து இயேசுவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கு உன்னை ஞானமுள்ளவனாக்குகிறது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 உனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பரிசுத்த வேதவசனங்களையும் நீ அறிந்திருக்கிறாய். அவைகள் ஒருவனை எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசத்தினாலே, இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஞானமுள்ளவனாக்கும் என்று உனக்குத் தெரியும். Se kapitletபரிசுத்த பைபிள்15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். Se kapitlet |