வெளிப்படுத்தல் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 “பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை வைத்திருக்கிறவரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாகியவர் சொல்லுகிற வார்த்தைகள் இவையே. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது; Se kapitletபரிசுத்த பைபிள்7 “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 “பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: பரிசுத்தமானவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் சாவியை வைத்திருப்பவரும், ஒருவரும் பூட்ட முடியாதபடி திறக்கின்றவரும், ஒருவரும் திறக்க முடியாதபடி பூட்டுகின்றவரும் சொல்லுகின்ற வார்த்தைகள் இவைகளே: Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; Se kapitlet |