Online Bibel

- Annoncer -




பிலிப்பியர் 4:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 ஏழ்மையுடன் வாழவும் எனக்குத் தெரியும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார உணவு உண்டிருந்தாலும், பசியோடு பட்டினியாயிருந்தாலும், வாழ்வில் நிறைவோ குறைவோ எதுவாயிருந்தாலும், எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனத்திருப்தியுடன் வாழும் இரகசியத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.

Se kapitlet Kopi




பிலிப்பியர் 4:12

Følg os:

Annoncer


Annoncer